Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 50

கூவல் என்பது கூரைக்குடிசை
இது கூவல் அன்ன விடரகம்
குகை
விடரகக் குகைகளில் தங்குங்கள்

  • பூரித்திருக்கும் பஞ்சைப் போல மேகங்கள் மலைமேல் மேயும்.
  • துவலைத் தூறல்கள் கை ஈரம் படத் தூறிக்கொண்டேயிருக்கும்.
  • செல்லவேண்டிய இடங்கூடத் தெரியாது.
  • அப்போது நீங்கள் இசைக் கருவிகளில் பண் பாட முடியாது.
  • எனவே கைகளும், கருவிகளும் காய்வதற்காகவும் இசைக்கருவிகள் ஈரம் படாமல் இருப்பதற்காகவும் கூவல் குடிசை போன்ற பாறை வெடிப்புக் குகைக்குச் சென்று தங்குங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

மை படு மா மலை, பனுவலின் பொங்கி,        
கை தோய்வு அன்ன கார் மழை, தொழுதி,     
தூஉய் அன்ன துவலை துவற்றலின்,
தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு,            
காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல்,              365
கூவல் அன்ன விடரகம் புகுமின்,          

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.