Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 49

குறிஞ்சித் தெய்வம் 
இன்குரல் விறலியர்

  • வியப்பூட்டும் இனிய குரலமைந்த விறலியர் மகிழ்ச்சிப் பெருக்கில் இனிய குரலோடு குறிஞ்சிப் பண்பாடுவதைக் கேட்டுக் கொண்டே செல்லுங்கள்.
  • இடி முழக்கத்துடன் மேகம் மேயும் மலையின் புதுமைப் பொலிவைப் பாராட்டிக் கொண்டும் மலைத்தெய்வத்தைக் (முருகனைக்) கைகூப்பித் தொழுதுகொண்டும் செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட,     
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்       
நறுங்கார் அடுக்கத்து, குறிஞ்சி பாடி,  
கைதொழூஉப் பரவி, பழிச்சினிர் கழிமின்       360

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி