Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 48

படம்
முனிவன் நெஞ்சில் திரு
இதுபோல்
திருமால் திருமகளைத்
தன் நெஞ்சில்
வைத்துக்கொண்டுள்ளான்
எனவே திருமால்
திரு அமர் மார்பன்
நன்னனைப் புலவர்
திரு அமர்  மார்பன் என்கிறார்
திருமால் கடவுளாக நன்னனைப்
போற்றுகிறார்
கண், காது குளிர

  • மலையின் காட்சிகளைக் கண் குளிரக் காணலாம்.
  • மலை ஒலிகளைக் காது குளிரக் கேட்கலாம்.
  • வாய் இனிக்கப் பழம் போன்றவற்றை உண்ணலாம்.
  • மற்றவற்றையும் இன்னும் கிடைக்க வேண்டு மென்று மரபு நெறி பிறழாமல் கேட்டுப் பெற்றுப் பாராட்டி மகிழலாம்.
  • நன்னன் திரு அமர் மார்பன்.
  • போர் என்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை.
  • அவனைப் பலமுறைப் பாராட்டலாம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,    
'இன்னும் வருவதாக, நமக்கு' எனத்    
தொல் முறை மரபினிர் ஆகி, பல் மாண்           355
செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்             

கண்ண் - தண்ண் - ஒற்றளவெடை 

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி