Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 47

கோதை பிணைதல்
அலகு இல்லாத ஒலி

  • இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும், கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும்.
  • இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும்.
  • நாலாத் திசைகளிலும் கேட்கும்.
  • எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வேறு ஒலிகளுக்கிடையே கேட்க முடியும்.
  • திருவிழாக் காலத்தில் தெருவெல்லாம் முழவோசை கேட்டுக் கொண்டேயிருப்பது போல நன்னன் மலைமீது மலைபடு கடாம் கேட்டுக்கொண்டேயிருக்கும்.
  • சிவந்த கண்களோடு பூத் தொடுக்கும் மகளிர் தூங்காமல் இருப்பது போல முழவோசை தெருக்களில் கேட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கும்.
  • அதுபோல மலைபடு கடாமும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.
  • இந்த ஓசைகள்தாம் மலைபடுகடாம்.

பூக்காரி 
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி,            345
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,           
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த             
மலை படு கடாம் மாதிரத்து இயம்ப    
குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர்     
முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண்  350
விழவின் அற்று, அவன் வியன் கண் வெற்பே;         

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி