Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 46

கரும்பாலை படம்
கரும்பாலை ஓசை மற்றொன்று
கடாம் ஒலி
(16)
பிணையல் ஓட்டும் ஓசை - உண்டதுபோக மீதமுள்ள பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணையலாகக் கட்டி, அக் கன்றுகளைப் பூத்திருக்கும் காந்தள் கொடிகளால் மெதுவாக அடித்து ஓட்டும்போது சிறுவர்கள் எழுப்பும் ஆரவார ஓசை.
(17)
வள்ளைப் பாட்டு - மகளிர் பாடிக்கொண்டு தினை குற்றும் வளையல் தாளப் பாட்டோசை.
(19)
பன்றிப் பறை - நிலத்தைக் கிண்டி சேம்பினையும், மஞ்சளையும் வீணாக்கும் பன்றியை ஓட்ட அந் நிலம் காப்போர் அடிக்கும் பன்றிப் பறையின் ஓசை.
(20)
குன்றகச் சிலம்பு  - இந்த எல்லா ஓசைகளையும் எதிரொலிக்கும் மலைக்காட்டின் எதிரொலி முழக்கம்.
இப்படிப் பல கடாம் ஓசைகளைக் கேட்கலாம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்             
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை;          
மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக்     340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;              
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்          
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;              

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.