Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 42

யானை பிளிறும் காட்சி மேலே
யானை ஒலி  இது
கடாம் ஒலி
(3)
யானை ஒலி - தன் கூட்டத்திலிருந்து பிரிந்த யானை கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் சங்கூதுவது போன்ற யானையின் ஒலி.
(4)
கானவன் அழுகை - கானவன் குகையில் படுத்திருந்தான். அவன் பாறைமேல் வைத்திருந்த அம்பு நழுவி அவன்மேல் விழுந்துவிட்டது. அப்போது அவன் அழும் ஒலி
(5)
கொடிச்சியர் பாடல் - புலி பாய்ந்ததால் தன் கணவன் மார்பில் உண்டான புண்ணை ஊசிநரம்பால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காகக் கொடிச்சியர்கள் பாடும் காப்புப் பாடலின் ஒலி.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்,         
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்       
புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்;      
சேய் அளைப் பள்ளி, எஃகு உறு முள்ளின்       300
எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை;             
கொடுவரி பாய்ந்தென, கொழுநர் மார்பில்,    
நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என,  
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்;       

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.