Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 40

மர நிழலில் இளைப்பாறும் போது ...
அறிஞர் கூறிய மாதிரம்

  • திசை காட்டும் அறிஞர்கள் கூறிய வழியில் செல்ல வேண்டும்.
  • குறுகிய, நீண்ட வழிகளைக் கடைப்பிடித்துச் செல்ல வேண்டும்.
  • புதியவர்களைப் பார்த்தால் அச்சம் வரும்.
  • பலவகையான பூக்கள் உதிர்ந்து வரி வரியாகக் கிடக்கும் நிழலில் அசதியைப் போக்க அமர்ந்திருக்கும் போது மலையோசை (மலைபடுகடாம்) பலவற்றைக் கேட்கலாம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு,             
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு, புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து,          
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்,            290
பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ  

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.