Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 4

யாழ் இசைத்துக்கொண்டே
செல்லல்
பாணரின் குடும்பக் குழுமம்

  • பேரியாழ்ப் பாணரோடு அவர்களின் தலைவன் உயர்ந்தோங்கிய மலையில் ஏறுகிறான்.
  • யாழை இசைத்துக்கொண்டே களைப்புத் துன்பம் தெரியாமல் பாணர் கூட்டம் ஏறுகிறது.
  • அவர்களிடம் இசைச் செல்வம் இருந்தது.
  • அதனை அவர்கள் அருள்தரும் பாங்கில் அள்ளி வழங்குவார்கள்.
  • அமைந்த விருப்பத்தோடு பண்ணிசைத்து வழங்குவார்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அமை வரப் பண்ணி, அருள் நெறி திரியாது
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப,           
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு            40
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்,

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்




No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.