Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 39

உண்ணப் பழங்கள் தருவார்கள்
இனியிர் ஆகுவிர்

  • கானவர் நீங்கள் உண்ணுவதற்குச் சுவையான பழங்களைத் தருவார்கள்.
  • உங்களை மகிழ்விக்கப் பூ மாலை போடுவார்கள்.
  • உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் நேர்ந்த உடல்துன்பம், உள்ள-உளைச்சல் அகிய அவலத்தைப் போக்குவார்கள்.
  • நீங்கள் அவர்களுக்கும் அவர்களது சுற்றத்தா1ர்களுக்கும் இனியவர் ஆகிவிடுவீர்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

உண்டற்கு இனிய பழனும், கண்டோர்              
மலைதற்கு இனிய பூவும், காட்டி,         
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற,      
நும்மின், நெஞ்சத்து அவலம் வீட,         285
இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்:       

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.