Sunday, 23 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 36

மாசுணம்
மலைப்பாம்பு
விலகிச் செல்க

  • குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்ட மலைப்பாம்பு  யானையின் வலிமையையும் அழிக்க வல்லது. அது தூங்கும் மரம் போலக் கிடக்கும். விலகிச் செல்லுங்கள்.
  • கண்ணில் பட்ட பூக்களையெல்லாம் முகராதீர்கள்.
  • விழுந்து கிடக்கும் பழங்களையெல்லாம் சாப்பிடாதீர்கள்.
  • இடப்புறமும் வலப்புறமும் உள்ள பெரிய மரங்களையும் பூக்களையும் பார்த்துக் கொண்டு வழியைத் தவற விட்டுவிடாதீர்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

கயம் கண்டன்ன அகன் பை, அம்கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்,             260
துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி,     
இகந்து சேண் கமழும் பூவும், உண்டோர்         
மறந்து அமைகல்லாப் பழனும், ஊழ் இறந்து             
பெரும் பயம் கழியினும், மாந்தர் துன்னார்   
இருங் கால் வீயும், பெரு மரக் குழாமும்;         265
இடனும் வலனும் நினையினர் நோக்கி,         
குறி அறிந்து, அவைஅவை குறுகாது கழிமின்:         

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.