Sunday, 23 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 34

கல்-அளை
கல்லுக் குகை
கல்லுக் குகையில்

  • மலைப்பாதை [வரைசேர் வகுந்து] வழியே கானகத்தில் செல்லுங்கள்.
  • கானவன் கழுது என்னும் பந்தலின்மேல் இருந்துகொண்டு எய்த அம்பு பட்டுக் காட்டுப்பன்றி விழுந்துகிடக்கும்.  
  • காய்ந்த மூங்கில் உரசித் தானே பற்றி எரியும் காட்டுத்தீ விழுந்துகிடக்கும் காட்டுப்பன்றியை மணம் கமழாமல் சுட்டு வைத்திருக்கும்.
  • அதனைத் தூய்மைப் படுத்தி உண்ணுங்கள்.
  • அருகில் குவளை பூத்த சுனையில் இருக்கும் தூய்மையான தெளிந்த நீரைப் பருகுங்கள்.
  • மீதமுள்ள கறியைப் பொதியாகக் கட்டி எடுத்துச் செல்லுங்கள்.
  • பறவைச் சிறகு போல் பறந்து திரியும் மக்களோடு வழியில் தங்காதீர்கள்.
  • கற்குகைகளில் வீட்டில் தங்குவது போலப் பாதுகாப்பாகத் தங்குங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,          
கழுதில் சேணோன் ஏவோடு போகி,   
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,           
நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்,            245
நெறிக் கெடக் கிடந்த, இரும் பிணர் எருத்தின்,           
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,   
முளி கழை இழைந்த காடு படு தீயின்               
நளி புகை கமழாது, இறாயினிர் மிசைந்து;    
துகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர்,   250
குவளை அம் பைஞ் சுனை, அசைவு விடப் பருகி;   
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினிர்,            
புள் கை போகிய புன் தலை மகாரோடு             
அற்கு, இடை கழிதல் ஓம்பி, ஆற்ற, நும்         
இல் புக்கன்ன, கல் அளை வதிமின்      255

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி