Sunday, 23 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 33

குரங்கு தாவல் - படம்
கடுவன் மூங்கில் மரக் கொம்பில் துள்ளல் - பாடல்
பராக்குப் பார்க்கக் கூடாது

  • வளம் மிக்க அவன் மலையில் மழை மிகுதியாகப் பொழியும். அப்போதெல்லாம் மயில் கூட்டம், அலகைப் பேய் போல் ஆடும்.
  • பறை முழக்கும் கோடியர்களின் சிறுவர்கள் துள்ளி விளையாடுவது போல மூங்கில் கொம்புகளில் ஆண்குரங்குகள் பாய்ந்து விளையாடும்.
  • உயர்ந்தோங்கிய மலையில், அச்சம் தரும் பாறை இடுக்குகளில் வண்டிச்சக்கரம் போலத் தேன் கூடு கட்டியிருக்கும்.
  • இவற்றைத் திடீரென உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • இவற்றைப் பார்த்துக் கொண்டே சென்றால், தடுக்கி விழவும், செல்லும் வழி தடுமாறவும் நேரும்.
  • எனவே செல்லும் வழியில் கவனம் வைத்துச் செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே      
அலகை அன்ன வெள் வேர்ப் பீலிக்      
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்; 235
கடும் பறைக் கோடியர் மகாஅர் அன்ன,           
நெடுங் கழைக் கொம்பர், கடுவன் உகளினும்;           
நேர் கொள் நெடு வரை, நேமியின் தொடுத்த,             
சூர் புகல் அடுக்கத்து, பிரசம் காணினும்,         
ஞெரேரென நோக்கல், ஓம்புமின், உரித்தன்று;          240
நிரை செலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர்            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.