Sunday, 23 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 32

புகர்முகம்
யானைக்கடவுள்
ஆற்றுப் பாதையில் புரிசையில் ஆனைக் கடவுள்

  • ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை.
  • அங்கே யானைச்சிலை [புகர்முகம்].
இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வயானைத் தெய்வம் போலும். முருகன் குறிஞ்சிக்கடவுள்.

  • அதன் கழுத்தில் மாலை.
  • அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை.
  • மழை பொழிவது போன்று அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை.
  • அந்த யானைக்குப் பக்கத்தில் இலஞ்சி [பொய்கை].
  • போர்த்திறம் கற்ற யானை முகத்தில் காணப்படும் சூழி என்னும் முகப்படாம் போல சுடரும் பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கை.
  • அது தனித்துச் செல்லும் ஆற்று வழி [இயவு].
  • அந்த யானைக்கோயிலுக்குச் சுற்றுமதில். மூத்த கற்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதில்.
  • அதற்குள்ளே யானைச்சிலைக் கடவுள்.
  • மரபு வழியே தொழப்பட்டுவரும் கடவுள்.
  • அதனைக் காணும்பொழுது தொழுதுவிட்டுச் செல்லுங்ககள்.
  • அங்கெல்லாம் உங்களது இசைக்கருவிகளை வறிதே கொண்டுசெல்வதைத் தவிர்த்து முழக்கித் தெய்வத்தைப் பரவிவிட்டுச் செல்லுங்கள்.
மூத்த புரிசை
பழமையான கல்லடுக்குக் கோட்டை
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

உயர் நிலை மாக் கல், புகர்முகம் புதைய,      225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை,              
தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்               
சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி,              
ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்  
பராவரு மரபின் கடவுள் காணின்,          230
தொழாநிர் கழியின் அல்லது, வறிது   
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி           

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி