Saturday, 22 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 30

படம் - கடலில் புயலால் உண்டாகும் சுழல்
பாடல் - ஆற்றுவெள்ளச் சுழல்
குண்டுகய முடுக்கர்
ஆழமான ஆற்றுமடுவில் நீர்ச்சுழல்
ஒருவர் ஒருவராகச் செல்லுங்கள்

  • ஆற்று மடுக்களில் முதலைகள் இருக்கும்.
  • ஆழமான அந்த மடுக்களில் நீர்ச்சுழிகள் இருக்கும்.
  • மலையில் மர அடர்த்தியால் இரவு போன்ற இருள் இருக்கும்.
  • ஆற்றின் ஓரமாகச் சென்றாலும் வழுக்கும் இடங்கள் உண்டு.
  • அங்கெல்லாம் பருமனாக உள்ள கொடிகளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.
  • குழந்தைகளை நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு ஒருவர் கடந்தபின் மற்றொருவர் என்று செல்ல வேண்டும்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,      
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,    
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்தன்ன, கான் யாற்று நடவை         
வழூஉம் மருங்கு உடைய; வழாஅல் ஓம்பி,                215
பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி,
துருவின் அன்ன புன் தலை மகாரோடு,           
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்  

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.