Friday, 21 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 22

ஆரிப்படுகர் இல்லம்
ஆரிப் படுகர் பாக்கம்

  • கானவர் பாக்கத்தில் அன்று இரவு தங்கியிருந்துவிட்டு மறுநாள் ஆரியப் படுகர் வாழும் பாக்கம் செல்லுங்கள்.
  • எரிபோல் தழைத்துச் சிவந்திருக்கும் செயலையந் தளிர்களை மாலையாகத் தொடுத்து சுற்றத்தார் அனைவரும் அணிந்துகொண்டு செல்லுங்கள்.
  • மூங்கில் அடர்ந்து அடைந்துகிடக்கும் அப் பாக்கத்துக்குச் சென்றபின்,
  • நாங்கள் மான விறல் வேல் நன்னனைப் பார்க்க வந்த பாணர்கள் என்று சொன்னவுடனேயே,

ஆரிப்  படுகர் மக்கள்
ஆரிப் படுகையில்
வாழும் மக்கள்
ஆரிப்படுகை =
நிறைந்த மலைச்சோலை
படம் - அண்மைக்கால மக்கள்
சங்ககால மக்களுக்கான
கண்ணோட்டம்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அன்று, அவண் அசைஇ, அற் சேர்ந்து அல்கி,              
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து,             
சேந்த செயலைச் செப்பம் போகி,            160
அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்  
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி,               
'நோனாச் செருவின் வலம் படு நோன் தாள் 
மான விறல் வேள் வயிரியம்' எனினே,           

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி