Friday, 21 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 20

காந்தள்

  • காந்தள் பூ சிவப்பு நிறத்தில் பூத்திருந்தது.
  • அதனைப் புலால்-கறித்துண்டு என்று கருதி எடுத்துச் சென்ற கழுகு உண்ணாமல் உதிர்த்தது.
  • அவை அகன்ற பாறைகளில் விழுந்து நெருப்புப் பிழம்புகள் போலக் கிடந்தன.
  • மணலில் உதிர்ந்தவை மணம் பரப்பிக்கொண்டிருந்தன.
  • முருகனை வேண்டி வெறியாடிய களத்தில் புலவுத் துண்டுகள் ஆங்காங்கே கிடக்கும். அதுபோலக் காந்தள் பூக்கள் பாறைமேல் பூத்துக் கிடந்தன.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

தீயின் அன்ன ஒண் செங் காந்தள்           145
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து,           
அறியாது எடுத்த புன் புறச் சேவல்,      
ஊஉன் அன்மையின், உண்ணாது உகுத்தென,          
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்,  
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும்           150
மண இல் கமழும் மா மலைச் சாரல், 

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.