Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 2

கானவர்
நீங்கள் செல்லும் வழியில் வழிப்பறி செய்ய
அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர்
உங்களுக்குத் துன்பம் செய்யமாட்டார்கள்
துணைபுணர் கானவர்
துணைபுரியும் கானவர்

  • கண்ணுக்கு எட்டிய தூரம் நெருங்கித் தழைத்திருக்கும் மரம் அடர்ந்த காட்டில் படுக்க வைத்தது போன்ற பாறைகளும், நிறுத்தி வைத்தது போன்ற பாதை வழிகளும் இருக்கும்.
  • வில்லம்பு வைத்திருக்கும் கானவர் அந்த இடங்களில் உங்களுக்குத் துணையாக வருவர்.
  • துன்பம் செய்யாமல் வழி காட்டுவர்.
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

கடுக் கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில் 
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின்,            15
எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி,             
தொடுத்த வாளியர், துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது, இயங்குநர் இயக்கும்  

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.