Friday, 21 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 19

பலா
அலங்கு சினை இறைஞ்சின
ஆடும் கிளைகளில் தொங்கின
பலா

  • விரலால் அடிக்கும் ஆகுளிப் பறைபோல் ஆந்தை ஒலிக்கும் உயர்ந்த மலையிலுள்ள பலாமரக் கிளைகளில் காய்களும் பழங்களும் குலுங்கின.
  • தலையிலும் தோளிலும், முழவையும் மற்ற இசைக் கருவிகளையும் பாணர் கூட்டம் சுமப்பது போல அம் மரங்கள் பலாப் பழங்களைத் தாங்க முடியாமல் சுமந்து வணங்கிக்கொண்டு நின்றன.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப,               140
குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து,  
கீழும் மேலும், கார் வாய்த்து எதிரி,     
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி,               
முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே:            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி