Thursday, 20 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 11

இது இக்காலத்து அரண்மனை
நன்னன் அரண்மனை இப்படி
மலையும், காடும் சூழ்ந்த பகுதியில் இருந்தது
நன்னன் தன் அரசாட்சி முழுவதையும் பிறருக்குக் கொடுத்தாலும் நிறைவடையாமல்
மேலும் மழை போல வழங்குவதற்காக நாள்மகிழ் இருக்கையில் காத்திருப்பான்

  • அவனது அரண்மனை விலங்குகள் விரும்பி விளையாடும் மலை, சோலை, கானம் ஆகியவற்றுக்கு இடையே இருந்தது.
  • அரசவை நாளெல்லாம் மக்கள் மகிழும் இருப்பிடமாகத் திகழ்ந்தது.
  • அதனை உலகமெல்லாம் காலமெல்லாம் புகழ்ந்துகொண்டேயிருந்தது.
  • பகைவரை வென்று அவர் தந்த வளங்களை மாரிபோல் அவன் புலவர்களுக்கு வழங்கி வந்தான்.
  • (மக்கள் தந்த வரிப்பணத்தை நாட்டு நலனுக்குச் செலவிட்டான்.)
  • அவன் தன்னை இகழ்பவர்களை மாற்றித் தன்வயப்படுத்தி விடுவான்.
  • புகழ்பவர்களுக்குத் தன் ஆட்சி உரிமையையே கொடுத்தாலும் அவன் மனம் நிறைவடையாது.
  • இன்னும் கொடுக்க ஏதுமில்லையே என்று ஏங்குவான்.
  • இடைவிடாமல் பெய்யும் தூறல் மழைபோல் மற்றவர்களுக்கும் வழங்கிக்கொண்டேயிருப்பான்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

மலையும், சோலையும், மா புகல் கானமும்,             
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப,      70
பலர் புறம் கண்டு, அவர் அருங் கலம் தரீஇ,
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்,        
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு           
அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு,               
தூத் துளி பொழிந்த பொய்யா வானின்,              75
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும், 

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி