Thursday, 28 May 2015

புறநானூறு 340

கரந்தை = கிராந்தி = விஷ்ணு கிராந்தி
காய்த்த கரந்தை மாக் கொடி விளைவயல் வந்து இறை கொண்டன்று தானை - பதிற்றுப்பத்து 40
மா = நீல நிறம் | நீல நிறப் பூப் பூக்கும் கொடி
இது திருநீற்றுப்பச்சை என்னும் செடி
இதனைக் கரந்தை என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள்
தஞ்சையை அடுத்த கரத்தட்டாங்குடி கரந்தைக்குடி என்பதன் மருவிய வழக்கு என்கின்றனர்
கொடி எனச் சங்ககால வழக்குக் காட்டுவதை நினைக்கவேண்டியுள்ளது.
அந்த இளையவள் கரந்தை பூத்திருக்கும் வயலில் ஓடி குன்றிமணியைக் கொத்தோடு [குரல்] பரித்து விளையாடுபவள்.
அவளைப் பற்றிக் கேட்கிறாய். சொல்கிறேன் கேள்.
அவளுடைய தந்தைக்கு மைந்தர்களும் உண்டு. அந்த மைந்தர்களும் தந்தையும் அவளைப் பனைமரம் போலக் கையை உடைய யானைமீது போருக்கு வரும் மன்னர்க்குக் கொடுக்கமாட்டேன் எனச் சாதிக்கின்றனர்.

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்
....................... ல் என வினவுதி, கேள், நீ:
எடுப்பவெ...,..................................................              5
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.

திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
............................... பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி