Thursday, 14 May 2015

புறநானூறு 310

படம்
வெண்ணெய் திருடினான் என்று கண்ணனைத் தாய்
கோலால் ஓச்சும் காட்சி
பாடல்
கிண்ணத்தில் தந்த பாலை அருந்தவில்லை என்று தாய்
செறாது
சிறுகோல் ஓச்சும் காட்சி
அன்றும் இன்றும் அஞ்சியின் (அஞ்சி - ஒரு குறுநில மன்னன் பெயர்) தாய்க்கு வருத்தம். வெவ்வேறு வருத்தம்.
நொந்த வருத்தம்
  • அன்று கிண்ணத்தில் பால் ஊட்டினாள். அஞ்சி அதனை உண்ண மறுத்தான். அவளுக்கு அப்போது சினம் வரவில்லை. என்றாலும் கையில் கோலை வைத்துக்கொண்டு அவனை அடித்தாள். அப்போது உயவெடு (அசந்துபோய்) வருந்தினாள்.
இன்ப வருத்தம்
  • இப்போதும் வருந்துகிறாள். அன்றைக்கு முதல்நாள் அவளது கணவன் போரில் வீழ்ந்தான். அதனை அவன் மகன் உன்னிலன் (நினைத்துப்பார்க்கவில்லை). அன்று போர்களம் சென்றான். பகைமன்னன் பட்டத்து யானையை வீழ்த்தினான். பகைவனின் அம்பு புண்ணில் தைத்திருக்கும் நிலையில் தன் கையிலிருந்த கேடயத்தின் மேல் விழுந்துகிடக்கிறான். இளந்தாடி அரும்பும் பருவத்தவன் அவன். இது கண்ட தாய்க்கு இன்ப வருத்தம்.  

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,     5
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.

திணை தும்பை; துறை நூழிலாட்டு.
பொன்முடியார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி