Wednesday, 13 May 2015

புறநானூறு 308

வேறுபாடு 
சிற்றரசன் பெருவேந்தனைப் புறங்கண்டது பற்றிக் கூறும் பாடல் இது.
புலவர் பாணனுக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாணன்
  • சீரியாழின் நலமும், நயமும் அறிந்த பாணன் அவன். 
  • அந்த யாழில் நயமாக வரும் பண் மிஞிறு என்னும் வண்டின் இசை போல் இருக்கும். 
  • பச்சை என்பது யாழின் போர்வை. 
  • அது மின்னல் போல் இருக்கும். 
  • அதன் நரம்பு பொன்-கம்பி போல் இருக்கும்.
நிகழ்வு
  • சீறூர் மன்னன் சிறிய இலைப்பகுதியை உடைய தன் எஃகம் என்னும் வேலை வீசினான்.
  • அது வேந்தன் ஊர்ந்துவந்த யானையின் முகத்தில் பாய்ந்தது.
  • சினம் கொண்ட வேந்தன் தன் வேலை வீசினான்.
  • அது என் தலைவனாகிய சீறூர் மன்னன் மார்பில் பாய்ந்தது.
  • நம்முடைய பெருவிறல் (பெரும்-வெற்றியாளன்) தன் நெஞ்சில் பாய்ந்த வேலைப் பிடுங்கி வீசினான். 
  • அப்போது அங்கிருந்த யானைகள் எல்லாமே தம் பெண்யானைகள் கண்டு நாணும்பட்டித் திரும்பி ஓடின. 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்,
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நய வரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே;          5
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே;
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன் தலை மடப் பிடி நாண,            10
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.

திணை வாகை; துறை மூதில் முல்லை.
கோவூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி