Wednesday, 15 April 2015

சிறுபாணாற்றுப்படை, காரி - பகுதி 9

காரி
இவனது கையில் உள்ள வாள் பகைவர்களை வீசிச் செந்நிறம் கொண்டு ஒளிரும். ஆனால் இவனோ தன்னைத் தேடிவந்து கேட்டவர்களுக்கு ஒலிக்கும் மணி கட்டியிருக்கும் வெண்மயிர்ப் பிடரிக் குதிரைகளைப் பரிசாக வழங்கினான். அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈரநிலம் போன்றவை. அந்த உரை உலகத்தையே வியப்பில் ஆழ்த்துபவை.

(இவன் குதிரை கறுப்பு. இவன் வழங்கிய குதிரைகளோ வெள்ளை)
(வேல் சிவப்பில் வீரம். | வீரக்கை சிவப்பில் ஈரம்.)
பாட்டு
(கறங்கு மணி)         
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,             
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,          
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,          
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ்           95


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.