Wednesday, 15 April 2015

சிறுபாணாற்றுப்படை, பேகன் - பகுதி 7

பேகன் மயிலுக்குப்
போர்வை போர்த்திவிட்டான்
இது இவனது கொடைமடம்
இது முதல் ஏழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. (இவர்களை நாம் கடையெழு வள்ளல்கள் என்று வழங்குகிறோம்). இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.   
  • அரிய உடல்திறனும், கண்டவரை வருத்தும் கட்டழகும் கொண்டவர்கள் ஆவியர்-குடி மக்கள். தலைவன் பேகன்.
  • பெருங்கல் நாடு எனப் போற்றப்படும் பழனிமலைப் பகுதியில் வாழ்பவர்கள் அந்த ஆவியர் குடி மக்கள். பேகன் ஒருநாள் மழை பொழியும் மலைச்சாரல் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று ஆடுவதைப் பார்த்து, அது குளிரில் நடுங்குவதாக எண்ணித் தன் போர்வையை அதன்மீது போர்த்தி விட்டவன்.
( முருகனின் மயிலூர்தி – ஒப்பிட்டு எண்ணிப் பார்ப்போம். )
பாட்டு
வானம் வாய்த்த வள மலைக் கவா அன்        
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய               85
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,           
பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண  


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.