Monday, 13 April 2015

சிறுபாணாற்றுப்படை, வஞ்சி - பகுதி 4

கழுநீர்ப் பூ மேயும்
கயவாய் எருமை
சேரரின் வளம் மிக்க வஞ்சி வறிது என்னும்படி வழங்குவான்.
கொழுத்த மீன்கள் காயப்படும்படி எருமை சேற்றில் நடக்கும் அங்குள்ள வளமான இதழ்களைக் கொண்ட கழுநீர்ப் பூக்களைத் தன் வலிமை மிக்க வாயால் மேயும். பின் படுத்துக் கொள்ள பலாமர நிழலுக்குச் செல்லும். பலா மரத்தில் மிளகுக் கொடி ஏறியிருக்கும்.
பின் அசை போட்டுக்கொண்டே மஞ்சள் இலை தன் உடலைத் தடவிக் கொடுக்கும்படி மஞ்சள் வயலில் படுத்திருக்கும். அப்போது அசை போனும். அதன் வாயில் கழுநீர்ப் பூவிலிருக்கும் விளையாத இளங்கள் நறுமணம் வீசும். அதன் பின்னர் எழுந்து போய் மீண்டும் அசை போட்டுக்கொண்டே குளவிப் பூப் படுக்கையில் படுத்துக் கொள்ளும்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இமயத்தில் வில் பொறித்தது
இது குடபுலத்தின் வளம். அதனைக் காக்கும் மரபில் வந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் தன் பகைவர்களை அடக்கி அவர்களது வடநாட்டு எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான்.
அந்தக் குட்டுவனின் தோள் கோட்டைக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்றது. அவன் பெரும்பாலும் தேரில் செல்லும் பழக்கம் உடையவன்.
இவனது சேரநாட்டு வஞ்சி வளம் மிக்க ஊர். அந்த வஞ்சி நகரமே ஏழை-நகரம்எ என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான்..
பாட்டு
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்     
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை         
பைங் கறி நிவந்த பலவின் நீழல்,          
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,  
விளையா இளங் கள் நாற, மெல்குபு பெயரா,               45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்     
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்             
வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த   
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்     
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே: அதாஅன்று,            50


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.