Monday, 13 April 2015

சிறுபாணாற்றுப்படை, முதுவாய் இரவலன் - பகுதி 3

படத்தில் ஒருத்தி மகரயாழை மீட்டுகிளாள்
பாடலில் பாண்மகன் ஒருவன்
\யாழை இடப்பக்கத் தோளில் மாட்டிக்கொண்டு
மீட்டுகிறான். 
முதுவாய் இரவல, கேள்!
விறலியருக்கு மானைப்போல் மருண்டு பார்க்கும் கண் நடந்து நடந்து சோர்ந்து போயிருந்த அவர்களது சிறிய காலடிகளை இளைஞர்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும் பாண்மகன் தனது சீறியாழை மீட்டிப் பாடியும் விறலியரை மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அந்த யாழை அவன் தன் இடப்பக்கத் தோளில் மாட்டிக் கொண்டு மீட்டி இசைத்தான். பாலைப் பண்ணில் நைவளத் திற இசையைக் கூட்டிப் பாடினான். அப் பண்ணை மீட்டுவதில் அவன் கைத்திறம் பெற்றவன்.
வையம் என்னும் உலக வண்டி நாம் இயக்க இயங்காத வண்டி. இந்த வையத்தில் வள்ளல்களைப் பார்க்கும் ஆசையில் பாணன் சென்று கொண்டிருந்தான். உள்ளத்தில் இருக்கும் சலிப்பும், உடலை வாட்டும் எவ்வமும் (துன்பமும்) துயரமாக மாறிப் பிறர் கொடுப்பதை ஏற்கும்படி அவனை ஆளாக்கி வழி நடத்திக் கொண்டிருந்தன..
பாட்டு
நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி    
கல்லா இளையர் மெல்லத் தைவர,    
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்       
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, 35
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை 
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,      
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல!        40


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.