Monday, 13 April 2015

புறநானூறு 261

நாகுமுலை
முலை
அன்ன
நறும்பூங்
கரந்தை
கரந்தைப் போரில் மாண்ட வள்ளல் வீட்டு வளமனை முற்றம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்துக் கலங்கிப் பாடும் பாடல் இது.
அந்தோ!
அன்று
என் தலைவனுடைய அடையாக் கதவினை உடைய இல்லம் (இரவலர்க்கு வழங்க எப்போதும் திறந்தே இருக்கும் இல்லம்) வண்டு மொய்க்கும் நறவுக்கள் பானையும், இன்னாருகென்று வரையறுக்காது எல்லாருக்கும் பெருஞ்சோற்று முரிவாயும் (பெருஞ்சோறு சமைத்து வைத்திருக்கும் அண்டாப்பானை திறந்திருக்கும் வாயையும்) கொண்டிருந்தது.
இன்று
அந்தப் பானைகள் நீர் இல்லாத ஆற்றில் கிடக்கும் அம்பிகள் போலப் பயன்றறு வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இதனைப் பார்க்கிறேன். இப்படிப் பார்க்கும் என் கண்விழிகள் இற்று விழட்டும்.   
முன்னே
வையத்தைக் காக்கும் வளம் நிறைந்த அரண்மனையில் உறங்கும் யானை சோம்பல் முரித்து மூச்சு விடுவது போல, ஆட்டிறைச்சியை நெய்யில் போட்டுச் சுடும் ஓசையும், அதனைப் புதுப்புது மாந்தர் வயிறார, கண் சிவக்க (செது = செம்மை, வயிற்றுக் குடல்) உண்ணும் காட்சியையும் வழங்கிக்கொண்டிருந்தது.  
இது
கரந்தைச்செடி
இதன் பூ
பசுவின்
முலைக்காம்பு
போல்
இருக்கும்
இனி அங்கே
வெற்றிவேல் வீரன்
பல ஆனிரைகளை தழுவிக்கொண்டு தன் கல்லா வல்வில்லால் ஓட்டிவந்த வீரன்
கூகை தன் இனத்தை இரை உண்ண அழைக்கும்படி, தடுத்தவரைக் கொன்ற வீரன்
இல்லாமல்
பசுவின் முலைக்காம்பு போல் பூத்திருக்கும் கரந்தைப் பூ சூட்டப்பட்டு
மரபுப்படி சூட்டப்பட்டு
தரம் (விரகு) அறிந்த பெருமக்களால் சூட்டப்பட்டு
ஆனிரை மீட்டுத்தந்தவன் நடுகல்லாகிவிட்டதால்,
தனிமைப்பட்டுக் கிடக்கிறது. (புலம்பிக் கிடக்கிறது).
அவனது மனைவி கைம்மைக் கோலத்துடன் மயிர் மழித்த மொட்டைத்தலையோடு, அணிகலன்கள் அனைத்தையும் களைந்துவிட்ட கோலத்தில் புல்லென்று அற்பமானது போல, அவனது வீட்டுமுற்றமும் புல்லென்று கிறக்கிறது.  
பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே;    5
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்,
மையல் யானை அயாவுயிர்த்தன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே  10
இது கரந்தை
பசுவின்
மடிக்காம்பு போல்
பூக்கும்
ஆனிரை மீட்கும்
வீரன் சூடும் பூ
பல் தழீஇய கல்லா வல் வில்
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி,
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட,
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய   15
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி,
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழி கல மகடூஉப் போலப்
புல்லென்றனையால், பல் அணி இழந்தே.

திணை கரந்தை; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி