Friday, 17 April 2015

சிறுபாணாற்றுப்படை, வேலூர் விருந்து - பகுதி 20

ஆமான்
வேலூர் விருந்து
வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம்.
கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும். வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது.
அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம்.
காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம்.
இனிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய உன் ஆயத்தாரும் பெறலாம்.
போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.
பாட்டு
[வேலூர் எய்தின்]
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு,        175
தேமா மேனிச் சில் வளை ஆயமொடு              
ஆமான் சூட்டின அமைவரப் பெறுகுவிர்.        


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.