Thursday, 16 April 2015

சிறுபாணாற்றுப்படை எயிற்பட்டினம் - பகுதி 17

இது பெரிப்ளஸ் நூல் காட்டும் படம். இதில்
Sopatma
எனக் காட்டப்பட்டுள்ள  துறைமுகம் 'சோபட்டினம்'.
சோ = மதில் = எயில்
மதிலொடு பெயரிய பட்டினம் - பாட்டில் உள்ள தொடர்
எயிற்பட்டினம்
நெய்தல் நில வழியில் சென்றால் 
எயிற்பட்டினம்
கடலூர்ப் பகுதியில்
நீங்கள் நல்லியக்கோடன் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினத்தின் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். அதனை அடைய நெய்தல்நிலப் பெருவழியில் செல்ல வேண்டி வரும்.
அங்கே அலைமோதும் நீரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்திருக்கும். அன்று பூத்த செருந்திப் பூக்கள் பொன் கொட்டிக் கிடப்பதுபோல் கிடந்து மருட்சியூட்டும். முண்டகப் ப்பூக்களைக் கதிர்மணிகள் என்று எண்ணிக் கடல் அலைகள் கழுவிக்கொண்டிருக்கும். புன்னைமரம் பூத்து முத்துக்களைத் தலையில் வைத்திருக்கும். கடற் கானல் வெண்மணலில் கடல்லை வந்து உலாவிக் கொண்டிருக்கும்.
அந்த நெய்தல் நிலப் பொருவழியில் சென்றால் கடலின் மணிநீர் சார்ந்த நிலத்தில், பனிநீர்ப் (நன்னீர்) பள்ளத்தில் இருக்கும் பட்டினம் ஒன்றை அடையலாம். அது மதிலொடு பெயரிய பட்டினம். (மதில் = எயில் | மதிலின் பெயர் இணைந்துள்ள பட்டினம் | எயிற்பட்டினம்).
அங்குச் சென்றால்,  
17
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,              
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,              
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,       
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,              
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர,             150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி,        
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய,              
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின்    


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.