Thursday, 16 April 2015

சிறுபாணாற்றுப்படை, ஈகைச்செந்நுகம் - பகுதி 14

படம் - ஒற்றைமாட்டுச் சுமைவண்டி நுகம்
நல்லியக்கோடன்
இவ்வாறு தனி ஒருவனாகவே
தன்னைத் தானே
நுகத்தில் மாட்டுக்கொண்டு
ஈகைவண்டியை
இழுத்துச் சென்றான்
ஈகைச் செந்நுகம்
நல்லியக்கோடன் காலத்துக்கு முன்பு மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல் பெருமக்கள்  ஈகை என்னும் தேரை ஏழு நுகங்கள் கட்டி ஆங்காங்கே இழுத்துச் சென்றனர்.
அவர்களது காலத்திற்குப் பிறகு நல்லியக்கோடன் தனியொருவனாக ஈகைத் தேரின் நுகத்தைத் தாங்கி இழுத்துச் செல்கிறான், என்கிறார் ஆற்றுப்படுத்தும் புலவர்.
நல்லியக்கோடன் ‘எழுசமம் கடந்தவன். அதாவது சொல்லப்பட்ட எழுவரின் சமநிலையைக் கடந்து மேம்பட்டவன். மேலும் எழு உறழ் திணிதோள் கொண்டவன், அதாவது கணையமரம் போன்ற தோளை உடையவன்,
இது இவனுடைய மாபெரும் கொடைத் தன்மையைக் காட்டுகிறது.
பாட்டு
[என ஆங்கு]
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்        
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்,   
விரி கடல் வேலி வியலகம் விளங்க,               
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள்    115       


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.