Thursday, 16 April 2015

சிறுபாணாற்றுப்படை, ஓரி - பகுதி 13

ஓரியில் வல்லமை
ஓரி
ஓரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் ஏறிச்சென்று ஓரி தாக்கினான். காரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் வந்து காரி எதிர்த்துப் போரிட்டான். முடிவில் காரியின் குறும்பறை நன்னாடு ஓரிக்குக் கிடைத்தது. போர் வெற்றியில் கிடைத்த அந்த நாட்டைத் தனது போர் வெற்றியைப் புகழ்ந்து யாழ் மீட்டிப் பாடிய பாணர்களுக்குக் கொடுத்தவன் ஓரி.
நாகு முதிர் நாகம் குறும்பொறை நன்னாடு – நாகு என்னும் நாகமரங்கள் மிகுதியாக இருந்ததால் ‘நாகம்’ என்னும் பெயரைப் பெற்றிருந்த நாகமலையை உடைய ‘குறும்பொறை நாடு’
பாட்டு
[நளி சினை]
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் 
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,               
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு     


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.