Wednesday, 15 April 2015

சிறுபாணாற்றுப்படை, நள்ளி - பகுதி 12

இவன் மலைநாட்டுத் தலைவன்.
பாடலில் தரப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது இவனது மலை உதகை மலையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
வளி துஞ்சு நெடுங்கோடு என்று பாடலில் கூறப்படுவது தொட்டபெட்டா மலைமுகடு எனலாம்.
துளிமழை என்பது மேகமூட்டம்.
நளிமலை என்பது குளிர் மிகுதியாக உடைய மலை
முனைமுகத்தில் புகழுடன் விளங்கும் இவனது கைகள் நண்பர்களிடம் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் நல்குவதில் புகழ்பெற்று விளங்கியது.
நடைப்பரிகாரம் என்பது வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதிப் பொருள்கள்.
பாட்டு
[கரவாது,]      
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்        
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை,     105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு               
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை      


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.