Wednesday, 15 April 2015

சிறுபாணாற்றுப்படை, அதிகன் - பகுதி 11

அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி தந்தான் 
அதிகன் = அதியன் = அதியமான்
= அதியமான் நெடுமான் அஞ்சி = அஞ்சி
(இவன் தன் ஆட்சியின் பெரும்பகுதி போரிலேயே கழித்துள்ளதை இவனது வரலாற்றிலிருந்து அறிவோம். ) வேல் வீச்சில் இவன் வல்லவன். பொதுவாகப் பிறரை உரசிப் பார்க்கும் சினம் இவனுக்கு உண்டு. ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் கடல் போல் போர் வேண்டும் என ஆரவாரம் செய்யும் படையும் இவனிடம் இருந்தது.
பூஞ்சாரலில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குத் தரப்பட்டது. அது சாவாமையைத் தரும் அமிழ்தம் போன்றது. அதனைத் தான் உண்ணாமல் புலவர் ஔவையாருக்குக் கொடுத்து அவரை நீண்ட நாள் வாழச் செய்தவன் இவன்.  
பாட்டு
[மால் வரைக்]
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி         100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,           
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,   


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.