Wednesday, 15 April 2015

சிறுபாணாற்றுப்படை, ஆய் - பகுதி 10

இது குற்றாலத்தில் உள்ள
ஆலமர் செல்வன் கோயில்
ஆய் இந்த
ஆலமர் செல்வனுக்குத்தான்
ஆடையை விருப்பமுடன்
கொடுத்தான்
ஆய்
இவன் மகிழ்ந்திருக்கும்போது சந்தனம் பூசிய கோலத்தோடு காட்சி தருபவன். சினந்திருக்கும்போது வில்லும் கையுமாகத் திரிபவன். ஆலமரத்தடியில் குடிகொண்டிருந்த சிவபெருமானின் சிலை ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட இவன் நச்சு (நீலம்) கொண்ட நாகப்பாம்பு ஒன்று இவனுக்குத் தந்த மேலாடையை அச்சிலைக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.
ஒப்பு நோக்குக
  • மதுரைக்காஞ்சி – பொதியமலைப் பகுதி – குற்றாலம் – தென்னன் = தென்முகக்கடவுள் – ஆய் குற்றாலத்திலுள்ள  தெட்சிணாமூர்த்திக்குத்தான் ஆடை போர்த்தினான்.
  • பேகன் பழனிமலை  முருகனின் மயிலுக்குப் போர்வை போர்த்தியதை இங்கு நினைவு கூரலாம்.
உடாஅபோரா ஆகுதல் அறிந்தும்,        
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, - புறம் 141
பாட்டு
[நிழல் திகழ்]
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்               
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,        
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,      
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.