Monday, 23 March 2015

கரிகாலன் கால்வழி


சங்கநூல் குறிப்புகளின் அடிப்படையில் தெளிவாகும் வரலாறு

பாடல் சொல்லும் செய்தி
  • சேட்சென்னி நலங்கிள்ளி என நலங்கிள்ளி பாடலில் விளிக்கப்படுகிறான் புறநானூறு 27
  • சேட்சென்னிநலங்கிள்ளி, சேட்சென்னியின் மகன் நலங்கிள்ளி. அவன் நடுகல் ஆனான். புறநானூறு 225
  • இளஞ்சேட்சென்னி தென்பரதவரையும் வடவடுகரையும் வென்றான். புறநானூறு 378
  • உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னி போர்க்கோலம் புறநானூறு 4
  • உருவப்பல்தேர் இளையோன் சிறுவன் கரிகால் பெருவளத்தான் பொருநராற்றுப்படை
  • நலங்கிள்ளி சேட்சென்னி இலவந்திகைப்பள்ளி என்னுமிடத்தில் துஞ்சினான் புறநானூறு 61
  • நெடுங்கிள்ளி காரியாறு என்னுமிடத்தில் துஞ்சினான். உறையூர் முற்றுகையின்போது இளந்தத்தன் என்னும் புலவரை ஒற்றுவந்தான் என்று கொல்ல முயன்றபோது கோவூர்கிழார் தடுத்துக் காப்பாற்றினார். புறநானூறு 47
  • நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டிருந்தபோது நெடுங்கிள்ளி கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். கோவூர்கிழார் அறிவுரை கேட்டு வெளியேறினான். புறநானூறு 44, கோவூர்கிழார் போரிடு அல்லது ஆட்சியைக் கொடுத்துவிட்டு வெளியேறு என்று அறிவுரை கூறினார். புறநானூறு 45
  • நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான். புலவரோடு சூதாடியபோதும் பண்பாளனாக நடந்துகொண்டவன். புறநானூறு 43
  • உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி என்பவன் சங்க காலச் சோழ அரசர்களுள் ஒருவன். பகைவர்களோடு போரிட்டுக் கூர் மழுங்கிய போர்க் கருவிகளுடன் குதிரை பூட்டிய பொலந்தேரில் அவன் உலா வந்ததைப் பரணர் பாடியுள்ளார். (புறம் 4)
  • இவனது அண்ணனை வயமான் சென்னி என்று குறிப்பிட்டு அவனைப் போல கொடை வழங்குமாறு பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் இளஞ்சேட்சென்னியை வேண்டுகிறார். (புறம் 266)
  • இப்பாட்டுடைத் தலைவனான சோழன் கரிகாற்பெருவளத்தான் இளஞ்சேட்சென்னியின் தம்பிமகன் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது.
  • பெரியப்பா மகன்மார் மூன்று அண்ணனை தம்பியருக்குப் பின் அரியணை ஏறியவன் இப்பாட்டுடைத் தலைவனான சோழன் கரிகாற் பெருவளத்தான் எனத் தெரிகிறது.
இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெரியவரும் வரலாற்றுக் கால்வழி இவ்வாறு அமைகிறது.
  • சேட்சென்னி அண்ணன். இளஞ்சேட்சென்னி தம்பி.
  • அண்ணன் சேட்சென்னியின் மகன் நலங்கிள்ளி. நலங்கிள்ளியின் அண்ணன் நெடுங்கிள்ளி. நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான். நலங்கிள்ளியின் மகன் சேட்சென்னி. சேட்சென்னியின் பேரன் சேட்சென்னி இலவந்திகைப்பள்ளி என்னுமிடத்தில் துஞ்சினான்.
  • தம்பி இளஞ்சேட்சென்னி உருவப்பல்தேர் போராளி. தென்பரதவர், வடவடுகர் ஆகியோரை வென்றவன். இவன் மகன் கரிகால் பெருவளத்தான். சங்ககாலத்துக் கரிகாலன் இவனே


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி