Monday, 16 March 2015

புறநானூறு 223

இது ஒரு நடுகல்
புலி குத்திப் பட்டான்
ஒருவனைக் குறிப்பது
கோப்பெருஞ்சோழன் நடுகல்
நமக்குக் கிடைக்கவில்லை
காவிரி ஆற்றங்கரையில்
அமர்ந்து அவன் வடக்கிருந்தான்.
அங்கு நடப்பட்டிருந்த அவனது
நடுகல் ஆற்று வெள்ளத்தில்
அடித்துச் சென்றது போலும் 
நண்பரின் உடம்பையும் உயிரையும் விரும்பி தனக்கு உரிமையாக்கிக்கொள்வதே தொல்நட்பு. திருவள்ளுவர் இந்த நட்பினைப் பழமை என்று குறிப்பிடுகிறார்.
இத்தகைய நட்புப் கொண்ட என் தோழன் கோப்பெருஞ்சோழன் நடுகல் ஆன பின்னரும் விலகி எனக்கு இடம் கொடுத்தான்.
அவன் பலருக்கு வாழ்க்கை நிழலைத் தந்து வாழ்ந்தவன். உலகம் புகழ வாழ்ந்தவன். இந்தப் பெருவாழ்வைத் தொடர்ந்து நடத்த முடியாமையால் வடக்கிருந்து கல்லானவன்.

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி,
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி,
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு
இன் உயிர் விரும்பும் கிழமைத்     5
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே.

திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி