Saturday, 21 March 2015

பொருநராற்றுப்படை பகுதி 11

படத்தில் காணும் அரசன்
நீராடச் செல்கிறான்
பாடலில் வரும் கரிகாலன்
வேளாண் வாயிலுக்கு
வருகிறான்
மாலையும், காலையும்
கல்லா இளையர்
பகலெல்லாம் உழைத்தவர் மாலை நேரம் வந்ததும் காணும் மனச்சுமை குறைந்த புன்மைநிலை போல எங்கள் நெஞ்சம் பாதுகாப்புச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூவைச் சூழ்ந்து வண்டுகள் மொய்ப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் கல்லா இளையர் சிலர் வந்து அரசன் வருகையைச் சொல்லிக் காட்டினர். நாங்கள் எழுந்து அவனை வணங்குவதற்கு முன்னர் அவன் முந்திக் கொண்டான். வருக என்று கூவி அழைத்துக் கொண்டே வந்தான். இது அவன் நடந்து கொள்ளும் முறைமை வழக்கம்.

அவனது இந்த வழக்கமான செயலுக்குப் பின்னர்…
பாட்டு
மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக்
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,  
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப, 
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட,        100
கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய்,    
அதன் முறை கழிப்பிய பின்றை, பதன் அறிந்து,


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி