Friday, 2 January 2015

தொல்காப்பியம், கிளவியாக்கம்

கிளவியாக்கம்
2-1
வாக்கியம் அமைத்தல்
திணை, பால், எண், இடம், காலம் மாறுபடாமல் இருக்க வேண்டும்
உயர்திணை, அஃறிணை என்று சொல் 2 வகைப்படும். மக்களைச் சுட்டும் சொல் உயர்திணை. மக்கள் அல்லாதனவற்றைச் சுட்டும் சொல் அஃறிணை
மகன், உயர்திணை
மான், அஃறிணை
484-1
ஆண்பால், பெண்பால், பலர்பால் மூன்றும் உயர்திணை
மகன், மகள், மாந்தர்
485-2
ஒன்றன்பால், பலவின்பால் இரண்டும் அஃறிணை
மான், மான்கள்
486-3
உயர்திணையில் ஆண்மை திரிந்த பெண்ணைச் சுட்டும் பெயர் இரு பாலுக்கும் பொது. தெய்வம் சுட்டும் பெயர் இரு திணைக்கும் பொது. எனவே பால் உணர்த்தும் ஈறுகளால் பிரித்துச் சொல்லப்படும்
பேடி வந்தான், பேடி வந்தாள், பேடியர் வந்தார், தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தார், தெய்வம் வந்தது
487-4
ன ஒற்று ஆண்பாலை உணர்த்தும்
உண்டான்
488-5
ள ஒற்று பெண்பாலை உணர்த்தும்
உண்டாள்
489-6
ர ஒற்று, ப இறுதி, மார் இடைச்சொல் ஆகியவை பலர்பாலை உணர்த்தும்
உண்டார், உண்ப, உண்மார்
490-7
து று டு ஆகியவை ஒன்றன்பால்
வந்தது, ஓடிற்று, குலைக் காந்தட்டு
491-8
அ ஆ வ ஆகிய மூன்றும் பலவின்பால்
வந்தன, வாரா, வருவ
492-9
பால் உணர்த்தும் இந்த 11 எழுத்தும் வினைச்சொல்லோடு வரும்
(மேலே காட்டப்பட்டுள்ளன)
493-10
பால் காட்டும் இவை மாறுபாடில்லாமல் பொருந்தி வருதல் வேண்டும்
அவன் வந்தான, அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன
494-11
ஆண்மை திரிந்த பெண்பால் சொல் ஆண்பால் முடிபும் கொள்ளும்
பேடி வந்தான்
495-12
வினாவும் விடையும் பொருந்தி வரவேண்டும்
வினாவுக்கு ஏற்ற விடை வேண்டும்
உண்டாயா? உண்டேன்
496-13
வினாவுக்கு வினாவும் விடையாக வரும்
உண்டாயா? உண்ணேனோ
497-14
தப்பான விடையும் சரி ஆகும்
உண்டாயா? பசி இல்லை
498-15
இரு பொருள் விடை (சினைமுதல் கிளவி)
சாத்தன் கை வலிதா, கொற்றன் கை வலிதா? சாத்தனிற் கொற்றன் கை வலிது.
499-16
தகுதிக் கிளவி
தகுதிக் கிளவி ஏற்றுக்கொள்ளப்படும்
மங்கல மரபு (செத்தாரைத் துஞ்சினார் எனல்)
இடக்கர் அடக்கல் (கால் கழுவி வா)
குழூஉக்குறி (வண்ணக்கர் பொன்னைப் பறி எனல்)
மரூஉ (இல்முன் பரப்பை முன்றில் எனல்)
500-17
இனச்சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை (செய்யுளில்)
“செஞ்ஞாயிற்றுக் கவினினை மாதோ”
(கதிரவன் போல் கவின் உடையவன்)
501-18
இயற்கைப் பொருளை இத் தன்மையது எனக் கூறல் வேண்டும்
நிலம் வலிது
நீர் தண்ணிது
502-19
செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல் வேண்டும்
மயிர் நல்ல ஆயின. பயிர் நல்ல ஆயின
503-20
ஆக்கத்துக்குக் காரணம் உண்டு
கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்ல ஆயின
504-21
வழக்கில் காரணம் இன்றியும் சொல்லப்படும்
மயிர் நல்ல ஆயின
505-22
பால் மயக்கம் தோன்றினால் கூறும் முறைமை
ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ தோன்றாநின்றார்?
506-23
உருவ மயக்கம் அஃறிணையைக் குறிக்குமாயின் கூறும் முறைமை
குற்றி கொல்லோ மகன் கொல்லோ தோன்றுகின்ற உருவு?
507-24
துணிவு கூறும் முறைமை
குற்றி அன்று, மகன்.
508-25
அடை சினை முதல், பெயர்
பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை
509-26
ஒருவரைக் கூறும் பன்மை
ஒன்றனைக் கூறும் பன்மை
வழக்கின் ஆகிய உயர்சொல்
இவை இலக்கணத்தால் சொல்லப்படுவன அல்ல
தாம் வந்தார்
தாம் வந்தனர்
என் பாவை வந்தாள்
510-27
இடப் பொருத்தம்
செல் தா வா கொடு சொற்களை இடம் பார்த்து வழங்க வேண்டும்
தன்மை, முன்னிலை, படர்க்கை
இடங்கள்
511-28
தா, தன்மைக்கு
வா, முன்னிலைக்கு
எனக்குத் தரும் காணம், நினக்குத் தரும் காணம்
சினக்கு வரும் காணம்
512-29
சொல், கொடு இவை படர்க்கைக்கு
அவரிடம் சென்றார்
அவருக்குக் கொடுத்தார்
513-30
வினா
அறியா வினா ‘யாது’ ‘எவன்’ என வினவும்
இப் பாட்டின் பொருள் யாது?
நிற்பது எவன் (=ஏன்)?
514-31
ஐய வினா
நம் எருது ஐந்தனுள் யாது கெட்டது?
515-32
தொகைப்படுத்தும் எண்
சினைமுதல் கிளவி வினைப்படும்போது உம் வேண்டும்
நம்பி கண் இரண்டும் நொந்தான்
நங்கை முலை இரண்டும் பெருகினாள்
516-33
மன்னாப் பொருளை (இல்லாத பொருளை) உம் சேர்த்துச் சொல்லுக
பவளக் கோட்டு நீல யானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை.
517-34
விடை
பிறிது பொருள் இன்மை கூறல்
பயறு உளவோ? இது வினா
உளுந்து அல்லது இல்லை. இது விடை
518-35
பொருளொடு பொருந்திய பொருள் இல்லை எனல்
இப் பயறு அல்லது இல்லை
519-36
பொருளொடு பொருந்தாப் பொருள் இல்லை எனல்
இவை அல்லது பயறு இல்லை
520-37
சிறப்பு வாக்கியங்கள்
இயற்பெயருக்குப் பின்னர் சுட்டுப்பெயரைக் கூற வேண்டும்
கொற்றன் வந்தான். அவனுக்குச் சோறு கொடுக்க.
521-38
செய்யுளில் இடம் மாறியும் கூறப்படும்
(செய்யுளில் காண்க)
522-39
சுட்டுமுதல் காரணக் கிளவி “அதனால்”
சாத்தன் அழகாய் எழுதுகிறான். அதனால் ஆசிரியன் அவனைப் பாராட்டுகிறான்
523-40
சிறப்புப் பெயர் முதலில் வரும்
சோழன் நலங்கிள்ளி
524-41
சிறப்புச் சொற்கள்
ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
கிள்ளி வளவன் வந்தான். இது ஒர்பெயர்.
கிள்ளி வந்தான். வளவன் போனான். இவை வேறு பெயர்க் கிளவி
525-42
தன்மைச் சொல்லோடு அஃறிணையும் சேர்த்து எண்ணப்படும்
“யானும் என் எஃகமும் சேறும்”. (நான் என் வேலுடன் செல்வேன்)
526-43
ஒருமை எண்ணின் பொதுப்பிரி பால்-சொல்
ஒருவர் வந்தார்
527-44
வியங்கோளில் திணை விரவும்
ஆவும் ஆயனும் செல்க.
528-45
வேறு வினைப் பொதுச்சொல்
அடிசில் அயின்றார். (அயின்றார் என்பது உண்ணல், தின்னல், பருகல் முதலானவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர்)
529-46
எண்ணும்போதும் பொதுச்சொல்
யாழும் குழலும் பறையும் இயம்பினார் (யார், குழல், பறை மூன்றும் இயம்)
530-47
இரட்டைக் கிளவி பிரித்தால் பொருள் தராது
கருகறுத்தது, கறுகறுத்தது, சுறுசுறுத்தது
531-48
ஒருபெயர்ப் பொதுச்சொல்
நாடு என்பது பொதுச்சொல். (சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு, எயின நாடு)
532-49
ஒன்றொழி பொதுச்சொல்
வடுகரசர் படையில்  ஆயிரம் மக்கள். (இதில் மக்கள் என்பது பெண்ணொழி பொதுச்சொல்) | பெருந்தேவி பொறை உயிர்த்த கட்டிலின்கண் நால்வர் மக்கள் உளர் (இது ஆணொழி பொதுச்சொல்) | இப் பட்டையில் ஆயிரம் யானை உள (இதில் யானை என்பது பிடியை விலக்கியது)
533-50
திணை விரவி எண்ணும்போது அஃறிணை முடிவு வரும்
மேய்ப்பானும் எருமையும் வந்தன
534-51
பலபொருள் ஒருசொல் இரண்டு வகை.
(விளக்கம் அடுத்த நூற்பாக்களில்)
535-52
1 வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்
மா தளிர்த்தது. மா பூத்தது. மா காய்த்த்து.
536-53
ஒன்றுவினை
மா வீழ்ந்தது. (மா மரமா, விலங்கா)
537-54
2 வினை வேறுபடா பலபொருள் ஒருசொல்
ஆன் கன்று நீரூட்டுக. (ஆன் கன்று, எருமைக் கன்று, பூங்கன்று)
538-55
ஒருவன் கூற்றாயின் தெரித்துக் கூறுக
பால் வடியும் முகம் என்றேன். இதில் பால் என்பது பால் போன்ற தெளிவு
539-56
திணைப் பொதுப் பெயர்கள்
திணைப் பொதுப்பெயர்கள் 18.
மற்றும் பிற
அஃறிணைப் பெயர்களான இவை உயர்திணையாக வரும்.
குடிமை
அவர்க்குக் குடிமை நன்று
ஆண்மை
அவர்க்கு ஆண்மை நன்று
இளமை
அவர்க்கு இளமை நன்று
மூப்பு
அவர்க்கு மூப்பு நன்று
அடிமை
அவர்க்கு அடிமை நன்று
வன்மை
அரசு வன்மை நன்று
விருந்து
விருந்து வந்தது
குழூஉ
அக் குழு நன்று
அரசு
அரசு நிலைத்தது
மகவு
மகவு நலிந்ததது
குழவி
குழவி அழுதது
தன்மை திரிபெயர்
அலி வந்தது
உறுப்பின் கிளவி
குருடு வந்தது
காதல்
என் காதல் பொலிவாயிற்று
சிறப்பு
என் யானை வந்தது
செறல்
கெழீஇயிலி வந்தது
விறல்
பெறுவிறல் வந்தது
பிற
பேடி வந்தது, குரிசில் வந்தது
540-57
திணைப்பொதுப் பெயர்
மேலும் சில
காலம்
இவர்க்குக் காலம் ஆயிற்று
உலகம்
உலகம் பசித்த்து
உயிர்
உயிர் போயிற்று
உடம்பு
உடம்பு நன்று
தெய்வம்
இவற்குத் தெய்வம் ஆயிற்று
வினை (=விதி)
இவற்கு வினை நன்று
பூதம் (காற்று முதலானவை)
இவனைப் பூதம் புடைத்தது
ஞாயிறு
ஞாயிறு எழுந்தது
திங்கள்
திங்கள் எழுந்தது
சொல்
சொல் நன்று
541-58
முறைமை (1)
‘குடிமை நல்லன்’ என நின்றவழிச் சொல்லாமல் ‘இவனுக்குக் குடிமை நன்று’ எனச் சொல்லவேண்டும்.
542-59
முறைமை (2)
‘காலன் கொண்டான்’ என நின்றவழிச் சொல்வதும் சரி
543-60
இனம் செப்பல்
குடம் கொண்டான் வீழ்ந்தான். இது குடமும் வீழ்ந்ததை உணர்த்திற்று
544-61
கண்,  தோள், முலை இவை ‘பன்மை சுட்டிய பெயர்நிலைக் கிளவிகள்
இவற்றைக் கண்கள், தோள்கள், முலைகள் எனச் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை. (கண் என்றாலே இரு கண்ணையும் குறிக்கும்.
545-62


அதன் தொல்காப்பியம் நூற்பா மூலம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி