Saturday, 20 December 2014

புறநானூறு # 142

வள்ளல் அரசன் பேகன்

அரசன் பேகன் வீரக்கழல் அணிந்த தன் கால்களால் யானைக் கடாவை அடக்கி ஆள்பவன். 

மழையானது நீர் இல்லாத குளத்தில் பொழியவேண்டும். வயலில் பொழியவேண்டும். அவ்வாளன்றி களர் நிலத்திலும் பொழிவது போல வள்ளல் பேகன் கொடை வழங்குவதில் ஒரு மடையனாக விளங்குபவன். ஆனால் போரின்போது மடமை இல்லாதவன். நல்லவர்களை விலக்கி அல்லாதவர்களைக் கொல்பவன்.

பாடல்

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,                               5
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.