Monday, 15 December 2014

புறநானூறு # 129

ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிய யானைகள்
இந்த விண்மீன்களை விட அதிகம்
ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிய யானையின் எண்ணிக்கைக்கு வானில் பூத்துக்கிடக்கும் மீனின் எண்ணிக்கையும் ஈடாக முடியாது.
அவன் நாட்டில் பலா மரங்கள் மிகுதி. குறி-இறைக் குரம்பைகளில் வாழும் அவன் நாட்டுக் குறவர் மக்கள் மூங்கிலில் பழுக்க வைத்த தேறல்-கள்ளைப் பருகி, வேங்கை மர முற்றத்தில் குரவை ஆடிவர்.

பாடல்

குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் 5
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.