Sunday, 14 December 2014

புறநானூறு # 128

இரவலர் முழக்கும் விசிக்கூடு முரசு 
ஆய் பொதியில் நாட்டு அரசன். அந்நாட்டில் பொருள் பெற்றுவரச் செல்வோர் விசித்துக் கட்டிய தம் முழவுப் பறையை அந்நாட்டும் பலா மரங்களில் தொங்கவிடுவர். அதனை அங்குள்ள குரங்கு முழக்கும்போது அங்குள்ள அன்னங்களின் ஆண் பறவைகள் எழுச்சி பெற்று ஆடும். – இத்தகைய இயற்கை வளமும், இசை சுகர்ச்சியும் கொண்டது ஆய் நாடு.

இந்த நாட்டில் ஆடிப்பாடும் மகளிர் தடையின்றிச் செல்லலாமே ஒழிய பெருமை மிக்கவர் எனினும் மன்னர் நுழையமுடியாது.

பாடல்

மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்  5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

திணை பாடாண் திணை; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.