Friday, 12 December 2014

புறநானூறு # 123

இது அரசன் தோர்களில் ஒருவகை
வழங்கிய தேர் வேறுவகை
கள்ளும், மகிழும் உண்டு மகிழ்ந்திருக்கும் போது தன் தேரைப் பிறருக்குக் கொடையாக வழங்குதல் என்பது எல்லார்க்கும் எளிது. தான் உண்டு மகிழாமல் காரி மன்னன் அணிகலன்கள் ஏற்றி வழங்கிய தேர் அவனது முள்ளூரில் பெய்த மழைத்துளிகளைக் காட்டிலும் அதிகம்.

பாடல்

நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்   5
பட்ட மாரி உறையினும் பலவே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.