Tuesday, 9 December 2014

புறநானூறு # 119

நிழல் இல்லாத நெடுவழியில் தனிமர நிழல் போலப்
பாரி விளங்கினான்
பாரி மூவேந்தரிடம் சென்று பிச்சையாகப்  பெற்றுவந்தாவது இரவலர்களுக்கு வழங்கும் வள்ளண்மை உடையவனாகத் திகழ்ந்தான். நிழல் இல்லாத நீண்ட வழியில் தனிமரம் நிழல் தருவது போலத் திகழ்ந்தான். அவன் இப்போது இறந்துவிட்டான். களிற்று யானை நெற்றி போல மழைகாலத்தில் ‘தெறுழ்’ பூத்துக் கிடக்கும் நாட்டில், புற்றீசல் போல தினை விளைந்திருக்கும் நாட்டில் இனி அந்த வள்ளண்மை நிலைத்திருக்குமா?

பாடல்

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை,
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப,
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து;
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல,        5
பணை கெழு வேந்தரை இரந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

திணை பொதுவியல்துறை கையறுநிலை.
பாரி மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.