Monday, 8 December 2014

புறநானூறு # 117

தூமம் தோன்றல்
வால்மீன் தோன்றல்

மைம்மீன் புகைதல்
எரிமீன் விழுதல்


பாரி மகளிர் ‘ஆய்தொடி அரிவையர்’. அவர் நாடு இயற்கைச் சீற்றங்கள் தாக்கினாலும் வளம் குன்றாமல் முல்லை பூக்கும் நலம் கொண்டது. அதற்குக் காரணம் அந்நாட்டில் அரசன் ஆட்சி செங்கோலாக அமைந்து சான்றோர் பல்கி வாழ்வதே ஆகும்.
இயற்கைச் சீற்றங்கள்
மைம்மீன் புகைதல் – புகையைக் கக்கிக்கொண்டே எரிமீன் விழுதல்.
தூமம் தோன்றல் – வால்மீன் தோன்றல்
வெள்ளி தென்திசையில் நகர்தல்
முல்லை அரும்பல் – காட்டுப்பூனைக் குட்டியின் முள் போன்ற கூர்மையான பற்களைப்போல் முல்லை அரும்புகள் தோன்றல்.
மழைவளம் – செங்கோல் ஆட்சி, சான்றோர் வாழ்தல் ஆகியனவும் பருவமழை பொய்யாமல் பெய்யக் காரணம் என நம்பப்பட்டது.

இந்தப் புறநானூற்றுப் பாடலின் அடிப்படையில் தோன்றிய பிற்காலப்பாடல்

வேதம் ஓதிடும் வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே! (விவேக சிந்தாமணி)

பாடல்

மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயலகம் நிறைய, புதல் பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண்
ஆமா நெடு நிரை நன் புல் ஆர,                    5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.                                10

திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
பாரி மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.