Friday, 5 December 2014

புறநானூறு # 113

பாரி மகளிர் இப்படி இருந்திருப்பார்களோ
ஒருவர் கற்பனை
பெரும்புகழ் பெற்ற பறம்பு மலையே! கள்ளும், கறிச்சோறும் துவையலும் வேண்டியவர்களுக்கெல்லாம் ஊட்டி அப்போது நட்புக் கொண்டிருந்தாய். இப்போது பாரி இறந்துவிட்டான். உன்னைத் தொழுது வாழ்த்துகிறேன். அவனது மகளிர்க்கு உரியவரைத் தேடிக்கொண்டு செல்கிறேன்.

பாடல்

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று,                               5
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.

திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
பாரி மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
           
காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.