Wednesday, 19 November 2014

தொல்காப்பியம், நூல் மரபு 1-1


தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூல்மரபு பகுதியில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை. 

இவற்றில் எழுத்து-மயக்கம் நீங்கலாக பிற ஆனைத்தும் இன்றும் மாற்றம் இல்லாமல் பின்பற்றப்படுகின்றன.

தொல்காப்பியம் ஒலி-எழுத்து, உரு-எழுத்து ஆகிய இரண்டையும் குறிப்பிடுகிறது.

நூன்மரபு = நூல்மரபு என்பது முன்னோர் நூல்கள் பின்பற்றிய மரபுநெறி.
  • தமிழில் அ முதல் ன் வரை ஒலியன் எழுத்து 30. (1) குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்று புள்ளி பெறும் சார்பு-எழுத்துக்களும் உண்டு. (2)
  • ஒலி என்பது மாத்திரை. மா என்பது 20ல் ஒரு பங்கு. திரை என்பது கண்ணின் திரை. இது இயல்பாக நொடிக்கும் நேரம் மாத்திரை. (7) எந்த இரண்டு மாத்திரைக்கு மேல் ஒலிக்காது. (5) ஓர் எழுத்துக்கு ஒலிநீட்டம் வேண்டின் எழுத்துக்களைக் கூட்டி எழுதிக் காட்டவேண்டும். (6) அ இ உ எ ஒ ஆகிய 5 குறில் எழுத்துக்கு ஒரு மாத்திரை. (3) ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ ஆகிய 7 நெடில் எழுத்துக்கு இரண்டு மாத்திரை. (4) மெய்யெழுத்துக்கும், சார்பெழுத்துக்கும் அரை மாத்திரை (11,12). இசைப்பாடலில் ம் எழுத்து அரை மாத்திரை அளவிலிருந்தும் குறையும். (13) இசைத்தமிழில் உயிரொலியும், மெய்யொலியும் நீண்டு ஒலிக்கும் (33).
  • மெய்யெழுத்து புள்ளி வைத்து எழுதப்படும். எ ஒ எழுத்தும் புள்ளி பெறும். மகரக்குறுக்கம் பேலும் ஒரு பெறும் (14,15,16)
  • புள்ளி இல்லா மெய்யெழுத்து அ ஒலி பெறும். அதன் உருவம் திரித்து எழுதப்பட்டு பிற உயிரொலிகளைப் பெறும். அப்போது முதலில் மெய்யொலியும் பின்னர் உயிரொலியும் இயையும். அது ஒலிக்கும் மாத்திரை உயிரொலியின் அளவினதாக இருக்கும். (17,18)  
  • க ச ட த ப ற என்னும் ஆறும் வல்லெழுத்து. ங ஞ ண ந ம ன ஆறும் மெல்லெழுத்து. ய ர ல வ ழ ள ஆறும் இடையெழுத்து. (19,20,21)
  • மெய்யொலிகள் இயைவது ஒலிமயக்கம். (22-30) பிறமொழிக் கலப்பால் இக்காலத்தில் இது நடைமுறையில் இல்லை.
  • அ இ உ மூன்றும் சுட்டெழுத்து (31). ஆ ஏ ஓ மூன்றும் வினா-எழுத்து (32)
நூற்பா மூலம்
குத்துக்கோடு வரை ஓர் அடி
  1. எழுத்து எனப்படுப, | அகரம் முதல் | னகர இறுவாய், முப்பஃது' என்ப | சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. | 1         
  2. அவைதாம், | குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற | முப்பாற்புள்ளியும், எழுத்து ஓரன்ன. | 2
  3. அவற்றுள் | `அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும் | ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப. | 3         
  4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் | அப்பால் ஏழும் | ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து' என்ப. | 4        
  5. மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. | 5     
  6. நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய | கூட்டி `எழூஉதல்' என்மனார் புலவர். | 6       
  7. கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை | நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. | 7
  8. ஒளகார இறுவாய்ப் | பன்னீர்-எழுத்தும் `உயிர்' என மொழிப. | 8      
  9. னகார இறுவாய்ப் | பதினெண் எழுத்தும் `மெய்' என மொழிப. | 9     
  10. மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா. | 10          
  11. மெய்யின் அளபே `அரை' என மொழிப. | 11       
  12. அவ் இயல் நிலையும், ஏனை மூன்றே. 12        
  13. அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே; | இசையிடன் அருகும், தெரியும் காலை. 13
  14. உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. | 14       
  15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். | 15       
  16. எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. | 16          
  17. புள்ளி இல்லா எல்லா மெய்யும் | உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும், | ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும், | ஆயீர் இயல-உயிர்த்தல் ஆறே. | 17        
  18. மெய்யின் வழியது, உயிர் தோன்று நிலையே. | 18      
  19. `வல்லெழுத்து' என்ப - `க, ச, ட, த, ப, ற' | 19          
  20. `மெல்லெழுத்து' என்ப - `ங, ஞ, ண, ந, ம, ன' | 20      
  21. `இடையெழுத்து' என்ப - `ய, ர, ல, வ, ழ, ள' | 21
  22. அம் மூ-ஆறும் வழங்கு இயல் மருங்கின், | மெய்ம்மயக்கு, உடனிலை, தெரியும் காலை. | 22        
  23. ட, ற, ல, ள, என்னும் புள்ளி முன்னர், | க, ச, ப, என்னும் மூஎழுத்து உரிய. | 23           
  24. அவற்றுள், | லளஃகான் முன்னர், யவவுந் தோன்றும். | 24          
  25. ங, ஞ, ண, ந, ம, ன, எனும் புள்ளி முன்னர், | தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. | 25           
  26. அவற்றுள், | ண-னஃகான் முன்னர், | க, ச, ஞ, ப, ம, ய, வ ஏழும் உரிய.   | 26   
  27. ஞ, ந, ம, வ என்னும் புள்ளி முன்னர், | யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. | 27           
  28. மஃகான் புள்ளி முன் `வ'வ்வும் தோன்றும்.    | 28          
  29. ய, ர, ழ, என்னும் புள்ளி முன்னர், | முதல் ஆகு எழுத்து, ஙகரமொடு தோன்றும். | 29
  30. மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் | தம் முன் தாம் வரூஉம்-ர, ழ, அலங்கடையே. | 30        
  31. அ, இ, உ அம் மூன்றும் சுட்டு. | 31         
  32. ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினா. | 32        
  33. அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், | `உள' என மொழிப;-`இசையொடு சிவணிய | நரம்பின் மறைய' என்மனார் புலவர். | 33

ஆங்கிலத்தில் இதன் விளக்கம்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி