Wednesday, 19 November 2014

தொல்காப்பியம், நூல் வரலாறு

தொல்காப்பியர் கற்பனை ஓவியம்
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் சில அறிஞர்களின் கணிப்பு
*
மேலும் ஒரு காலக் கணிப்பு
இடைச்செருகல்
தொல்காப்பியருடன் கல்வி பயின்ற ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார் இவ்வாறு கூறுகிறார்.
தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்


  • தமிழ் பேசும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலை, தெற்கில் குமரிமுனை ஆகிய இரண்டு எல்லைகளுக்கு இடைபட்டுக் கிடப்பது.
  • இங்குப் பேசப்படும் வழக்கு-மொழியும், இம்மொழி பற்றி முன்னோரால் சொல்லப்பட்டனவும் இந்த நூலுக்கு முதல்.
  • இந்த முதலில் இருக்கும் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றும் இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளன.
  • அத்துடன் செந்தமிழ் என்னும் இயற்கை பொருந்திக் கிடக்கும் இடங்கள் முந்தைய நூலில் சொல்லப்பட்டவை கண்டறியப்பட்டு முறைப்படி எண்ணிப்பார்க்கப் பட்டுள்ளன.
  • பின்னர் அவை புலமாக (மொழிநிலமாக)த் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுத்தவன் தொல்காப்பியன் எனத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டான். 
  • இந்த நூல் குற்றமற்ற பனுவல்.
  • நிலந்தரு திருவின் பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது.
  • அவையிலிருந்த அதங்கோட்டு ஆசான் அறம் பேசும் நான்கு மறைகளையும் முழுமையாகக் கற்றவன். அவன் எழுப்பிய ஐயங்களைத் தொல்காப்பியன் தெளிவுபடுத்தினான். தமிழெழுத்து மரபு மயக்கமில்லாதது என்பதை எடுத்துக் காட்டினான்.
  • தொல்காப்பியன் அப்போது வழக்கில் இருந்த ஐந்திரம் என்னும் நூலின் அறிவிலும் நிறைவு பெற்றவன்.
  • இந்த நூலால் தொல்காப்பியன் என்று தன் பெயரை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டான்.  
  • தொல்காப்பியன் பல வகையான புகழும் நிறைந்த தவக்கோலம் கொண்டவன்.

பனம்பாரனார் பாடியது (குத்துக்கோடு வரை ஓர் அடி)

வடவேங்கடம் தென்குமரி | ஆயிடைத் | தமிழ்கூறு நல்லுலகத்து | வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் | எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் | செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு | முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் | புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல் | நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து | அறங்கரை நாவின் நான்மறை முற்றிய | அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து | மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி | மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த | தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் | பல்புகழ் நிறுத்த படிமையோனே. |



1 comment:

  1. நனிச் சிறப்பு. நன்றி

    ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி