Tuesday, 11 November 2014

புறநானூறு 86 Purananuru 86

காண்பது புலி இருக்கும் கல் அளை
பாடல் கூறுவது
புலி இருந்துவிட்டுப் போன கல்லளை
என் வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிக்கொண்டு நின்று “உன் மகன் எங்கு இருக்கிறான்” என வினவுகிறாய். அவன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறுதான் இது. அவன் தானாகவே போர்க்களத்தில் தோன்றுவான். (நீங்கள் அவனை அழைக்க வேண்டியது இல்லை).

பாடல்

சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;                  5
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
காவற்பெண்டின் பாட்டு.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.