Monday, 10 November 2014

புறநானூறு 85 Purananuru 85

முழா அரைப் போந்தை
முழவு போன்ற அடிப்பகுதி
கொண்ட பனை
என் தலைவன் போர் புரிகிறான். அது அவன் ஊர் அன்று. அவன் நாடும் அன்று. எனவே ஒரு சாரார் அவன் வெற்றி பெற்றான் என்கின்றனர். மற்றொரு சாரார் வெற்றி இல்லை என்கின்றனர். இப்படி இவர்கள் சொல்வது நல்லதாகப் போய்விட்டது. அதனால் நானே என் சிலம்பு ஒலிக்க ஓடி நே ரில் சென்று பனை மரத்து அடிவேர்ப் பகுதியில் நின்றுகொண்டு பார்த்தேன். அவன் கண்டது வெற்றியே.

பாடல்

என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,
என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;                  5
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.

திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.