Sunday, 9 November 2014

புறநானூறு 81 Purananuru 81

கிள்ளி அணிந்திருந்த சோழர் குடிக்கு உரிய ஆத்தி மலர்
கிள்ளி ஆத்திப்பூ மாலை அணிந்திருக்கிறான். வில்லை வளைத்துக்கொண்டு கவிந்த கையுடன் காணப்படுகிறான். அவனது படை ஆர்த்து எழுவது கடலைக் கட்டிலும் பெரிதாக உள்ளது. அவன் களிற்றின் முழக்கம் இடியோசையைக் காட்டிலும் பெரிதாகித் தாங்க முடியவில்லை. இந்த நிலையில் அவன் கைக்குள் அகப்பட்டவர், இரக்கம் கொள்ளத்தக்கவர் யாராக இருக்கக்கூடும்?

பாடல்

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?       5

திணை தும்பை; துறை அரச வாகை.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைச் சாத்தந்தையார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.